நாணய வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் முகமாக மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துள்ள அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த ஒரு வருட காலத்துக்கு சலுகையுடனான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சு மற்றும் அமைச்சர்கள் பாவனைக்கான வெளிநாட்டு வாகன இறக்குமதி மறு அறிவிப்பு வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொது சேவை ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் ஆறு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment