மைத்ரி சொன்னது போல் இறுதி வாரத்தில் ஓடவில்லை: கோத்தா - sonakar.com

Post Top Ad

Saturday, 29 September 2018

மைத்ரி சொன்னது போல் இறுதி வாரத்தில் ஓடவில்லை: கோத்தா



2009 யுத்தம் நிறைவுறுவதற்கு முன்னான முக்கிய இரு வார கால கட்டத்தில் மஹிந்த, கோத்தா, சரத் பொன்சேகா என யாருமே நாட்டில் இருக்கவில்லையெனவும் தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக யுத்தத்தை முன்னெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.

இதேவேளை, இறுதிக் கட்டத்தில் சென்னை அல்லது காட்டுப் பகுதியிலிருந்து கிளம்பி கொழும்பில் விமானத் தாக்குதல் நடாத்துவதற்கான திட்டம் குறித்து உளவுத் தகவல் கிடைத்திருந்ததாகவும் தானே அவற்றை எதிர்கொண்டதாகவும் மைத்ரி வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் முரண்பாடு வெளியிட்டுள்ளார் கோத்தபாய ராஜபக்ச.



அப்படியான எந்த தகவலும் அக்கால கட்டத்தில் வரவில்லையெனவும், தான் நாட்டிலேயே இருந்ததாகவும் எங்கும் செல்லவில்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.

எனினும், கொழும்பு தாக்கப்படும் எனும் அச்சத்தில் மஹிந்த, கோத்தா என அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியிருந்ததாக மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment