பொலிஸ் மா அதிபர் பூஜித மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க் கட்சி.
அடிக்கடி மனநிலை மாற்றத்துக்குள்ளாகும் பூஜித சிரிப்பது, அழுவது மற்றும் ஊழியர்களை தாக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் மருத்துவ ரீதியாக அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளமை கண்கூடாகத் தெரிவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தனர்.
தற்போது பூஜித தொடர் சர்ச்சையில் சிக்கி வருகின்ற போதிலும் அவரைப் பதவி நீக்கினாலும் ஏதாவது ஒரு நாட்டின் தூதராக நியமிக்கப்படுவார் எனவும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பதிரன மற்றும் தாரக பாலசூரிய ஆகியோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment