தோல்வியில் முடிந்த கூட்டு எதிர்க்கட்சியின் கொழும்பை நோக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தின் போது தமது ஆதரவாளர்களுக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
தமது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிசாரோ அரசாங்கமோ எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதால் தற்போது அது பற்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதர்களிடம் முறையிடப் போவதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.
கூட்டு எதிர்க்கட்சியின் விஷப் பால் விவகாரம் தொடர்ச்சியாக அரசியல் வாத மேடைகளில் எள்ளிநகையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment