மைத்ரி மற்றும் கோத்தபாயவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவின் மற்றும் குற்றஞ்சுமத்திய நாமல் குமாரவின் குரல் மாதிரிகள் அரச அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசியில் பதிவான உரையாடல் அடிப்படையிலேயே இக்குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை உறுதி செய்யும் அடிப்படையில் இப்பரிசோதனை இடம்பெறவுள்ளது.
இதற்கிடையில் பொலிஸ் உளவாளியான நாமல் குமாரவை சந்தித்த இந்திய பிரஜையொருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குறித்த நபருக்கு மன நிலை சரியில்லையென இந்திய தூதரகம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment