ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த டி.ஐ.ஜி நாலக டி சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் தகவல் தொழிநுட்ப பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.
மைத்ரி - கோத்தா கூட்டணியில் இணைவார்கள் எனவும் அதனைத் தடுக்க பாதாள உலக பேர்வழிகளைப் பயன்படுத்த நேரிடும் எனவும் நாலக பேசிய ஒலிப்பதிவின் அடிப்படையில் ஏலவே அவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு சி.ஐ.டியினரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment