கீத் நொயார் கடத்தல் விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு ஆஜராகி மீண்டும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் கடத்தல், கொலைச் சம்பவங்களின் பின்னணியில் இராணுவமே தொடர்புபட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல இராணுவ உயரதிகாரிகள், முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் ஜனாதிபதி என பல முக்கியஸ்தர்கள் சி.ஐ.டியினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment