இத்தாலியில் கைதானவர் 'ராஜதந்திரி' இல்லை: அரசு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 September 2018

இத்தாலியில் கைதானவர் 'ராஜதந்திரி' இல்லை: அரசு!


ஆட்கடத்தலில் ஈடுபட்டு இத்தாலியில் கைதான இலங்கை நபர் தற்போது எந்தவொரு தூதரகத்திலும் பணியில் இல்லையென விளக்கம் வெளியிட்டுள்ளது அரசாங்கம்.


நான்கு இளைஞர்களை தன்னோடு அழைத்துச் சென்றிருந்த குறித்த நபர் ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த நிலையில், தற்போது அவர் எங்கும் பணியிலில்லையெனவும் வேறு ஒரு அரச நிறுவனத்தில் பணியாற்றிய நிலையிலேயே அவருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

தனது மகள்கள் மற்றும் மருமகன்கள் என இரு பெண்களையும் இரு ஆண்களையும் குறித்த நபர் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment