மாகாண சபைத் தேர்தல்கள் தாமதமாவதற்குத் தான் காரணமில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலை, தாமதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் அரசுக்குக் கிடையாது. மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையிலுள்ள குறைபாடுகளினால், அவ்வறிக்கை அங்கீகரிக்கப்படாமையே இத்தாமதத்திற்குக் காரணமாகும். இந்தத் தாமதத்தை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், என் மீது சுமத்துவது அர்த்தமற்றதாகும் என்கிறார்.
அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொது நலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றக் கருத்தரங்கு, 2019 - தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment