சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்துக்கமைவாக அங்கு பெண்களுக்கு சமூக மட்டத்தில் உயர் பதவிகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரம், மற்றும் அரச பணிகளில் பங்கு என பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டு வரும் தொடர்ச்சியில் மஸ்ஜிதுன் நபவி மற்றும் கஃபா சார்ந்த தலைமைத்துவ நிர்வாக பணிகளுக்கு 41 பெண்கள் நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ள அஷ்ஷெய்க் சுதைஸ், பெண்கள் எதிர்கால சவுதி அரேபியாவின் தூண்கள் என விளக்கமளித்துள்ளார்.
கடந்த பல தசாப்தங்களாக சவுதி அரேபியா தவறான பாதையில் சென்றிருந்ததாகவும் எதிர்காலத்தில் மிதவாத கொள்கை கடைப்பிடிக்கப்படும் எனவும் அந்நாட்டின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment