புலிகளுக்கு வக்காளத்து? மீண்டும் சிக்கலில் அயுப் அஸ்மின்! - sonakar.com

Post Top Ad

Saturday, 1 September 2018

புலிகளுக்கு வக்காளத்து? மீண்டும் சிக்கலில் அயுப் அஸ்மின்!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற அயுப் அஸ்மின் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

யாழில் வெளியாகும் வலம்புரி பத்திரிகையில் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை விரட்டியரை அயுப் அஸ்மின் மறைமுகமாக ஆதரிப்பதாக வெளியான தலைப்புச் செய்தியின் பின்னணியில் அதற்கான மறுப்பை அஸ்மின் வெளியிட்டிருந்த போதிலும் பத்திரிகைப் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டதன் பின்னணியில் ஊடக அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.


நேற்று(31) நடைபெற்று முடிந்த  130 ஆவது மாகாண சபை அமர்வில் அஸ்மின் கீழ்கண்டவாறு தெரிவித்ததாக குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களாட்சி தத்துவத்துக்கு மாறாக இருந்தால் விடுதலை புலிகள் போன்று நாம் செயற்பட வேண்டும்.மக்களிற்கு விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பத்தில் முக்கிய முடிவுகளை நாம் எடுக்கவேண்டும்.அவ்வாறே தான் கடந்த காலங்களில் புலிகளும் மாத்தையா கருணா போன்றோருக்கு எதிராக மேற்கொண்டனர்.
இதே போன்று தான் அன்றைய காலத்திலும் புலிகளின் தலைமையினால் வட பகுதி முஸ்லீம்கள் ஒரு சிலரினால் இவ்வாறான வெளியேற்ற முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும்.இது சரியாக இருப்பதாகவே தற்போது தோன்றியுள்ளது. 

- Farook Sihan / Photo: N.M.Abdullah

No comments:

Post a Comment