மியன்மாரின் ஆங் சூ கீக்கு வழங்கப்பட்ட கௌரவ பிரஜாவுரிமையை பறிக்க தீர்மானித்துள்ளது கனேடிய நாடாளுமன்றம்.
ரோஹிங்ய இனப்படுகொலைகளைக் கண்டித்து கடந்த வாரமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் ஆங் சூ கீக்கு வழங்கப்பட்ட கௌரவத்தையும் நீக்க நாடாளுமன்றம் ஏகமானதாக முடிவெடுத்துள்ளது.
ஜனநாயகவாதியாக அறியப்பட்ட காலத்தில் ஆங் சூ கீ கனடா, ஒட்டாவாவில் (2007) இக்கௌரவத்தைப் பெற்றுக்கொண்டமையும் ரோஹிங்ய இன அழிப்பை நியாயப்படுத்தி மௌனித்திருந்த நிலையில் சர்வதேச அளவில் கௌரவங்களை இழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment