கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரயில் மோதி இருவர் உயிரிழந்து மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் இன்று காலை ராகமயில் இடம்பெற்றுள்ளது.
ராகம ரயில் கடவையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை இப்பின்னணியில் இரயில் பயணங்கள் தாமதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயப்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment