பி'சேனை: பதுரியா பள்ளிவாசல் உண்டியலை உடைத்துக் கொள்ளை! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 September 2018

பி'சேனை: பதுரியா பள்ளிவாசல் உண்டியலை உடைத்துக் கொள்ளை!


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தின் பதுரியா பள்ளிவாயல் உண்டியல் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.09.2018) உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


பிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாயலின் உண்டியல் இன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பள்ளிவாயல் நிருவாக சபையினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை தொழுகையினை முடித்து பள்ளிவாயலில் இருந்து வெளியே வந்தவர் பள்ளிவாயல் உண்டியல் திறந்திருப்பதைக் கண்டு பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் இந்த வருடம் இதனுடன் மூன்றாவது தடவை பள்ளிவாயல் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாயல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.


-அனா

No comments:

Post a Comment