வாடகைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து முச்சக்கர வண்டிகளிளும் கட்டண மீட்டர்கள் பொருத்தப்படுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இனியும் அவகாசத்தை நீடிக்க முடியாது என சுட்டிக்காட்டுகின்ற வீதிப் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சில் ஒக்டோபர் முதல் சட்டம் இறுக்கமாக அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கிறது.
மீட்டருடன் பயணத்துக்கான பற்றுச்சீட்டும் வழங்கப்பட வேண்டும் என சட்ட விதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment