73வது ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு ஐ.நா பொதுச் செயலாளர் அன்டனியோ கட்டரசை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இலங்கையின் பங்களிப்புக்கு இதன் போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஐ.நாவுடனான கூட்டுறவை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது.
திலக் மாரப்பன, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் இதன் போது கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment