தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்தால் அவருக்கு பாதுகாப்பு வழங்கத் தயார் என தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
கூட்டு எதிர்க் கட்சிக்குள் தற்போது இடம்பெற்று வரும் உள்வீட்டு சர்ச்சைகளினால் வேண்டுமானால் கோத்தா அச்சப்பட வேண்டிய சூழ்நிலையிருப்பதாகவும் எனினும் அதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் எனவும் ரணில் மேலும் தெரிவிக்கிறார்.
கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் கோத்தபாய தொடர்பில் கட்சிக்குள் மாற்றுக் கருத்து உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment