ஈரான்: இராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 22 September 2018

ஈரான்: இராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்!


1980 - 88 வரையான ஈரான் - ஈராக் யுத்த  ஆரம்பத்தின் நினைவாக ஈரானில் பல்வேறு இடங்களில் இராணுவ அணி வகுப்புகள் நடந்து வருகிறது.



இந்நிலையில், தென்மேற்கு பகுதி நகரமான அவாஸில் இன்று இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிப் பியோகம் மேற்கொள்ளப்பட்டு ஆகக்குறைந்தது 20 பேர் காயமுற்றுள்ளதுடன் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் - அமெரிக்க உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் துப்பாக்கிதாரிகள் இராணுவ சீரூடையே அணிந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமையும் உயிரிழப்பு தொடர்பில் ஈரான் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லையென்பதும் சுமார் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக பிற தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment