இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க மொட்டைத் தலையுடன் இடி அமீன் போன்று காட்சியளிப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.
இருவருக்குமிடையிலான கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில், ஒரு இராணுவ உயரதிகாரியாகவும் பொது சேவை ஊழியராகவும் தனது தலை முடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று கூட தெரியாது மொட்டைத் தலையுடன் இடி அமீன் போன்று மகேஸ் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இளைப்பாறிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் தற்போதைய இராணுவத்தின் பலம் குறித்து பேசுவது வேடிக்கையாக இருப்பதாக மகேஸ் தெரிவித்திருந்ததற்கே பொன்சேகா இவ்வாறு பதிலளித்துள்ளமையும் இருவருக்கிடையில் கடந்த சில தினங்களாக கருத்து மோதல் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment