ஆசிய நாடுகளுக்கிடையிலான வலைப் பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது இலங்கை அணி.
55:46 எனும் புள்ளியடிப்படையில் ஹொங்கொங் அணியை வெற்றி கண்டு இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள இலங்கை, சிங்கப்பூருடன் இறுதியாட்டத்தில் மோதவுள்ளது.
இதன் மூலம் அடுத்த வருடம் இங்கிலாந்து, லிவர்பூலில் இடம்பெறவுள்ள உலக சம்பியன்சிப் போட்டியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளதோடு தற்போதைய போட்டித் தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியைத் தழுவாத ஒரே அணியாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment