இலங்கையின் நாணய வீழ்ச்சியை விட வேகமாக ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கு சரிந்து வருவதாக தெரிவிக்கின்ற அகில விராஜ், 2020 அளவில் மஹிந்த செல்லாக் காசாகி விடுவார் என தெரிவிக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக கட்டியெழுப்பப்பட்டிருந்ததாகவும் 1994ல் ஆட்சி கை மாறிய போது அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை நாணய பெறுமதி 49 ரூபா மாத்திரமே எனவும் தெரிவித்துள்ள அவர், மஹிந்த ராஜபக்ச பொருளாதாரத்தை அதாளபாதாளத்துக்குத் தள்ளிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, நாட்டின் ஆட்சியதிகாரத்தைத் தம்மிடம் ஒப்படைத்தால் இலங்கை பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியும் என மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment