சீன கடற்படையினரால் பயன்படுத்தப்படும் ஏவுகணைக் கப்பல் ஒன்றை இலங்கைக்குப் பரிசாக வழங்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சீனத் தூதரகம்.
அடுத்த வருடம் உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவும் சீனாவும் போட்டியிட்டுக் கொண்டு இலங்கைக்கு கடற்படை யுத்த உபகரணங்களை வழங்கி வருகின்ற அதேவேளை இந்து சமுத்திரம் இராணுவ மயப்படுத்தப்படுவதாக ஜப்பான் கவலை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், ஹெலிகப்டர் இறங்கு தளம், ஏவுகணை செலுத்தல் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கியுடன் கூடிய கப்பல் ஒன்றையே சீனா வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment