மஹிந்த ஆட்சியிலும் அலரி மாளிகையில் திருமணம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 1 September 2018

மஹிந்த ஆட்சியிலும் அலரி மாளிகையில் திருமணம்!


ராஜித சேனாரத்னவின் புதல்வர் சத்துரவின் திருமண வைபவம் அலரி மாளிகையில் இடம்பெற்றது பேசு பொருளாகியுள்ள நிலையில் மஹிந்த ஆட்சியிலும் அலரி மாளிகையில் திருமண வைபவங்கள் நிகழ்ந்துள்ளதாக ஆளுந்தரப்பினர் தகவல் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.


இப்பின்னணியில் சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியாலாளர் ஹசந்த ஹெட்டியாராச்சியின் திருமண வைபவம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தமது திருமண பதிவே அங்கு நடந்ததாகவும் மஹிந்த சாட்சிக் கையெழுத்திட்டதாகவும் ஹசந்த தரப்பு தெரிவிக்கின்றமையும் சத்துர முறைப்படியான அனுமதியும் அதற்கான கட்டணமும் செலுத்தியே அலரி மாளிகையில் திருமணத்தை நடாத்தியதாக பிரதமர் அலுவலகமும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment