மைத்ரி - மஹிந்த கை கோர்த்தால் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதமே நடைபெறும் என கூட்டு எதிர்க்கட்சியினர் வெளியிட்டு வந்த தகவலை மறுத்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.
நிவிதிகல ஸ்ரீலசுக ஒன்று கூடலில் வைத்தே இது தொடர்பில் விளக்கமளித்துள்ள மைத்ரி, ஜனாதிபதி தேர்தலை முன் கூட்டி நடாத்தும் எவ்வித நோக்கமும் தனக்கில்லையெனவும் அது திட்டமிட்டபடி தனது பதவிக் கால முடிவிலேயே இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக அடுத்த தவணையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment