பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியா வசம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 September 2018

பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியா வசம்!


பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தைத் தயார் செய்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை.


இந்தியாவில் மாத்திரம் சுமார் 120 விமா நிலையங்களை குறித்த அதிகார சபை பராமரித்து வரும் நிலையில் அதன் அனுபவத்தின் அடிப்படையில் இலங்கைக்கு 'நட்புக்கரம்' நீட்டுவதாக இந்தியா தெரிவிக்கிறது.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை மத்தள விமான நிலையத்தினை  இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment