ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதர் உட்பட ஐந்து தூதரக அதிகாரிகளை நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஜனாதிபதி தொலைபேசியூடாக தூதரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும் பல மணி நேரமாக மறுபக்கத்திலிலிருந்து பதில் அழைப்பு வரவில்லையெனவும் இதன் பின்னணியிலேயே இம் மீளழைப்பு இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியானி விஜேசேகர உட்பட்ட குழுவினர் அங்கு தமது கடமைகளை சரிவரச் செய்வதில்லையென முறைப்பாடுகள் நிலவி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை வெளியுறவுத்துறை அமைச்சு மேலதிக விளக்கங்கள் வழங்க மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment