நல்லூரில் மாட்டிறைச்சிக் கடைகளுக்குத் தடை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 September 2018

நல்லூரில் மாட்டிறைச்சிக் கடைகளுக்குத் தடை!



நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பசு வதையினைத் தடுப்பதற்கும் சைவ சமய விழுமியங்களைப் பேணும் முகமாவும் சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள் தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கு.மதுசுதன் குறிப்பிட்டுள்ளார்.


நல்லூர் பிரதேச சபையின்  அமர்வு இன்று(11) இடம்பெற்ற போது சபை  எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவது தடை செய்யப்பட  வேண்டும் எனவும் அத்துடன் சபையினால் குத்தகைக்கு விடப்படும் மாட்டிறைச்சிக் கடைகள் இனி குத்தகைக்கு விடப்படாது தடுக்கப்பட வேண்டும் என்ற வகையிலான தீர்மான வரைபை குறித்த   உறுப்பினர்  அமர்வில் முன்வைத்தார்.

அதற்கமைவாக மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று நல்லூர் பிரதேச சபை இன்றைய அமர்வில்   ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இது தவிர தற்போது வரை இச்சபை எல்லை பகுதிக்குள்  2 முதல்3 வரையான மாட்டிறைச்சி கடைகள் இயங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment