நாணய வீழ்ச்சிக்கும் நாங்கள் தான் காரணமா? கோத்தா கேள்வி! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 September 2018

நாணய வீழ்ச்சிக்கும் நாங்கள் தான் காரணமா? கோத்தா கேள்வி!


இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பொருளாதார சரிவுக்கும் ராஜபக்சக்களே காரணம் போன்று அரசாங்கம் சித்தரிப்பதாக தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.



விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து, அதில் இரண்டாவது வழக்காகத் தமக்கெதிரான வழக்கை ஆரம்பித்துள்ளதன் நோக்கம் இதுவே என தெரிவிக்கின்ற அவர், டி.ஏ ராஜபக்ச நினைவகத்துக்கு பணம் செலவிட்டமையே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என அரசாங்கம் தெரிவிக்க முனைவதாக அபிப்பிராயம் வெளியிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் எனும் நம்பிக்கையில் கோத்தபாய அண்மைக்காலமாக நேரடி அரசியல் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment