புறக்கோட்டை, 2ம் குறுக்குத் தெருவில் புத்தரின் முகம் பொறித்த சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் 119 ஊடாக பொலிசாருக்கு அறிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஞாயிறு தினம் தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பொலிசார் குறித்த சேலை வகையை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, விற்பனை செய்த 52 வயது நபரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. ஏலலே சென்ட்ரல் ரோட் பகுதியிலும் இவ்வகை சேலைகள் விற்பனை செய்யப்பட்டதாக குறித்த நபர் தகவல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க அதேவேளை, இந்தியாவில் இவ்வகை சேலைகள் சாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றமையும் பெரும்பாலும் இந்தியவிலிருந்தே இவை தருவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment