ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக ஒருதலைப்பட்சமாக தாம் அறிவித்ததனை ஏற்றுக்கொள்ள மறுத்த பலஸ்தீனர்களுக்குத் தண்டனையாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகவர் நிலையம் ஊடான அனைத்து நிதியுதவிகளையும் நிறுத்தியுள்ளது அமெரிக்கா.
United Nations Relief Works and Agency (UNRWA) அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிவாரண நடவடிக்கைகள் இதனால் முற்றாகப் பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.
பல்தீன அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் அதற்கு ஈடு கொடுக்கும் நீண்ட கால திட்டம் இல்லையெனவும் அமெரிக்கா விளக்கமளித்துள்ளமையும் ஜெருசலத்தை இஸ்ரேலுக்கு தாரைவார்த்து பிராந்தியத்தில் புதிய சர்ச்சைகளை அமெரிக்கா உருவாக்கி விட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment