பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவராக சித்தரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள கமர் நிசாம்தீன் தான் எந்தத் தவறும் செய்யவில்லையென தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கைதான நிசாம்தீன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவரைப் பயங்கரவாத நடவடிக்கைக்குத் தொடர்பு படுத்தும் வகையில் கண்டெடுக்கப்பட்ட குறிப்புப் புத்தகம் அவருடையதில்லையெனவும் அவருக்காக ஆஜராகிய சட்டத்தரணி தெரிவிக்கிறார்.
இந்நிலையிலேயே, தனக்காக பிரார்த்தித்த மற்றும் போராட்டங்களை நடாத்தியோருக்கு நன்றி தெரிவித்துள்ள நிசாம்தீன், தான் எந்தத் தவறும் செய்யவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment