விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
சதொச நிதி முறைகேடு தொடர்பில் தன்னை முன்னரும் கைது செய்து பிணையில் விடுவித்ததாகவும் அதன் பின் தான் பிணை விதிகளை மீறவில்லையென்பதனால் இம்முறையும் பிணை வழங்க வேண்டும் என ஜோன்ஸ்டன் தரப்பு முன் வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வழக்கு விசாரணை முடியும் வரை ஜோன்ஸ்டனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment