பொலிசாரின் ஸ்னைப்பர் ஆயுதம் ஒன்று காணாமல் போயுள்ள நிலையில் தனது உயிருக்கும் ஆபத்திருப்பதாக அண்மையில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த ஆயுதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவின் பொறுப்பிலேயே இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மைத்ரி - கோத்தா மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு நாலக டி சில்வா திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலும் நாலக டி சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment