மூன்று மாதம் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதியிருந்தும் அரசைக் கவிழ்க்கும் கூட்டு எதிர்க்கட்சியின் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக தான் ஒரு மாதம் முன் கூட்டியே நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.
மஹிந்த ராஜபக்சவின் போராட்டத்துக்குத் தாம் என்றும் துணையாகவே இருக்கப்போவதாகவும் பொதுஜன பெரமுனவைப் பலப்படுத்தவே தாம் நாடு திரும்பியதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தனது புதல்வன் நாமல் இன்னும் 35 வயதையெட்டாததால் தனது குடும்பத்திலிருந்து ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக மஹிந்த அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment