நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி அணியினர் இம்மாதம் 8,9 ஆம் திகதிகளில் கண்டி அஸ்கிரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிகளில் பங்குபற்றி இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.
10.09.2018 திங்கட்கிழமை கண்டி பல்லேகல உள்ளக அரங்கில் இடம் பெற்ற இறுதி போட்டியில் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியினர் மிகச்சிறப்பாக எதிர் அணியான யாழ்ப்பாணம் நெல்லியடி வித்தியாலய கபடி அணியினரை எதிர் கொண்டு துணைச் சம்பியன் படத்தினை தமதாக்கிக் கொண்டனர்.
தேசிய மட்ட போட்டிகளில் இவ்வாறான ஒரு வெற்றியானது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக கொண்டாடப்பட வேண்டியதாக கருதப்படுகிறது.
அதே தினங்களில் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் டி.எஸ் சேனநாயக்கா கல்லூரி மைதானங்களில் நடைபெற்றதேசிய மட்ட பெட்மின்டன் போட்டிகளில் பங்கு பற்றிய அணியினர் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததோடு காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொழும்பு ஆனந்தா கல்லூரியிடம் வெற்றி வாய்பினை நழுவ விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
-Sameen Mohamed Saheeth
No comments:
Post a Comment