சவுதி அரேபியாவில் முதற்தடவையாக இரவு நேர பிரதான செய்தி வாசிப்பில் பெண் ஒருவர் பங்கேற்றுள்ளார்.
2016ம் ஆண்டு முதற்தடவையாக சவுதி தேசிய தொலைக்காட்சியில் பெண் செய்தி வாசிப்பாளருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இரவு நேர செய்தி வாசிப்புக்கு பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
வயீம் அல் தகீல் எனும் குறித்த பெண் செய்தி வாசிப்பாளர் கடந்த வியாழன் இரவு சவுதியா தொலைக்காட்சியின் 21.30 மணி இரவு நேர செய்தி வாசிப்பில் பங்கெடுத்துள்ள அதேவேளை முஹம்மத் பின் சல்மானின் எதிர்கால திட்டங்களுக்கமைய சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல துறைகளிலும் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் சாரதி அனுமதிப் பத்திரமும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
نشرة الأخبار الرئيسية مع عمر النشوان ووئام الدخيل.#هوية_قناة_السعودية pic.twitter.com/cOhWDSHR7c— قناة السعودية 🇸🇦 (@saudiatv) September 20, 2018
No comments:
Post a Comment