தொடர் சர்ச்சை மற்றும் முறைப்பாடுகளுக்குள்ளாகியுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை விசாரிக்க மூவர் கொண்ட உயர் மட்டக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கு அமைச்சரின் பணிப்புரையின் கீழ் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளின் அவசியம் குறித்து ஆராயப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், பூஜிதவை பதவி நீக்கம் அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கே இருப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment