கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரத்தில் கோத்தபாய மற்றும் சரத் பொன்சேகாவும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.
இவ்விவகாரத்தில் முன்னர் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் இராணுவ மேஜர் அமல் கருணாசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட இருவரும் அடுத்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.
மஹிந்த அரசில் இடம்பெற்ற பல்வேறு கடத்தல், கொலைச் சம்பவங்கள் கோத்தபாயவின் கட்டளைப்படியே இடம்பெற்றதாக மேர்வின் சில்வா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment