பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்ட - ஒழுங்கு அமைச்சு செயலாளர் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பூஜிதவை பதவி விலகுமாறு பிரதமரும் ஜனாதிபதியும் அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவலையும் இன்று நாடாளுமன்றில் வைத்து நிராகரித்துள்ள பிரதியமைச்சர் நலின் பண்டார அமைச்சர் ரஞ்சித் மத்தும அமைச்சு மட்ட விசாரணைக்கே உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
பூஜித - நாலக முறுகல் மற்றும் பூஜிதவின் செயற்பாடுகளின் பின்னணியில் தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment