இன்று பிற்பகல் முதல் பெய்து வந்த மழை காரணமாக பதுளை மற்றும் அக்குறணை பகுதிகள் நீரில் மூழ்கியிருந்ததோடு மேலும் பல இடங்களுக்கு வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி பிரசுரமாகும் வேளையில் அக்குறணையில் நீர் மட்டம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை அடுத்த 24 மணி நேரத்துக்கு கடும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
தென்பகுதியில் 2மீற்றர் உயரத்துக்கு கடல் அலை எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment