புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளில் இடம்பெற்றுவரும் பௌத்த மதகுருவின் அத்துமீறல் மற்றும் பிரதேச மக்களின் நீண்ட கால காணி பிரச்சினை தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தரும்படியான மகஜர், தொலை நகல் மற்றும் தபால் மூலமாக புல்மோட்டை அனைத்துப்பள்ளிகள் ஒன்றியத்தினால் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பௌத்த மத குரு புல்மோட்டையின் அனைத்து பகுதிகளிலும் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் பிரதேச மக்களின் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான வசதிகளை உருவாக்கித் தரும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரிசிமலை விகாரையை அண்டிய பிரதேசத்திலும் நில அளவீடு இடம்பெறவுள்ளதோடு தற்சமயம் தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் 4.5 ஏக்கர் நிலம் மாத்திரமே அளவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-Mohamed Anwar
No comments:
Post a Comment