மைத்ரிபால சிறிசேன மற்றும் கோத்தபாயவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்ட நாமல் குமாரவை சந்திக்கச் சென்றிருந்த இந்திய பிரஜையொருவர் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த நபர் மஹிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கொலைப் பட்டியலில் அடங்குவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதான நபர் தனது சுற்றுலாப் பயண விசா முடிவடைந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்துள்ளமையும் ஆர்.எஸ்.எஸ். தலையீடு இலங்கையில் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment