நேபாள் சென்றிருந்த மைத்ரி இலங்கை திரும்பும் வழியில் ஸ்ரீலங்கன் விமான சேவையில் வழங்கப்பட்ட முந்திரியின் தரம் பற்றி பகிரங்கமாக தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து வெளியிட்டுள் அவர், தனக்கு வழங்கப்பட்ட முந்திரியை மிருகங்களுக்குக் கூட வழங்க முடியாத அளவு தரக்குறைவாக இருந்ததாகவும் இவ்வாறு தரக்குறைவான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு அதிகாரிகளே காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை, நேர ஒழுங்கு மற்றும் வாடிக்கையாளர் கவனிப்பில் தமது தரத்தை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment