2016ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் மலேசிய விஜயத்தின் போது விமான நிலையத்தில் வைத்து இலங்கைத் தூதர் இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட மூவருக்கும் அபராதம் விதித்துள்ளது மலேசிய நீதிமன்றம்.
தமிழ்நாட்டில் இயங்கும் கடும்போக்கு அரசியல் அமைப்பின் உறுப்பினர்களான குறித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பற்றை வெளிக்காட்ட மஹிந்தவின் விஜயத்தின் போது விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, அப்போதைய தூதர் அன்சார் தாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்ட மூவருக்கும் தலா 9500 மலேசியன் ரிங்கிட் (ரூ.387,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment