யுத்தம் நிறைவுறும் தருவாயில் புலிகள் அமைப்பு விமானத்தில் வந்து கொழும்பு மீது பாரிய தாக்குதலை நடாத்தவுள்ளதாக உளவுத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் மஹிந்த - கோத்தா நாட்டை விட்டுக் கிளம்பிவிட்டதாகவும் தானே பாதுகாப்பு அமைச்சராக யுத்தத்தை நிறைவு செய்ததாகவும் மைத்ரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தான் இரண்டு நாட்கள் மாத்திரமே ராஜதந்திர பணி நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாகவும் மே 19ம் திகதி நாடு திரும்பி யுத்த நிறைவை நாடாளுமன்றில் அறிவித்ததாகவும் விளக்கமளித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
கொழும்பு மீதான தாக்குதல் குறித்த தகவல் தான் அறிந்திராத ஒன்றென கோத்தபாயவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment