சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு பாகிஸ்தானியர்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 30 September 2018

சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு பாகிஸ்தானியர்கள் கைது!


நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததுடன் வெலிகடை பகுதி உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த இரு பாகிஸ்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குடிவரவு, குடியகல்வு சட்டவிதிகளுக்குப் புறம்பாக தங்கியிருந்து தொழில் செய்து வந்த நிலையில் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக இந்தியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள் இவ்வாறு கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment