கல்கிஸ்ஸ - ரம்புக்கன இடையேயான புதிய சொகுசு ரயில் சேவை எதிர்வரும் 25ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது ரயில்வே திணைக்களம்.
கல்கிஸ்ஸயிலிருந்து காலை 8.30க்குப் புறப்பட்டு 10.10 அளவில் ரம்புக்கனயயை அடையும் குறித்த ரயில் மீண்டும் மாலை 4.30க்கு அங்கிருந்து திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவைக்கான கட்டணம் 3000 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கே இப்புதிய சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment