காலையில் இருந்து மாலை வரை ஆளுங்கட்சியினரின் குரோத மனப்பான்மை வெளிப்பட்டுக்கொண்டேயிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
வானொலி, தொலைக்காட்சியென எங்கு பார்த்தாலும் ஆளுங்காட்சியினர் நிறைந்திருப்பதாகவும் காலையில் ஆரம்பித்து மாலை வரை அரசியல் குரோத மனப்பான்மையிலேயே கருத்து வெளியிட்டு வருவதாகவும் இதனால் நாட்டு மக்களும் மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாகவும் மஹிந்த தெரிவிக்கிறார்.
ருவன்வெல்லயில் வைத்தே இன்று இவ்வாறு தெரிவித்துள்ள மஹிந்த, அரசாங்கம் பௌத்த சாசனத்தையும் சீரழித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment