அடுத்த வருடம் இடம்பெறவுள்ள கிரிக்கட் உலக கிண்ணப் போட்டியின் பின்னணியில் அக்கிண்ணத்தை உலகைச் சுற்றி எடுத்துச் செல்லும் நடவடிக்கையின் கட்டமாக நேற்றைய தினம் உலகக் கிண்ணம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இலங்கை கிரிக்கட் அணி மோசமான பெறுபேறுகளைப் பெற்று விமர்சனத்துக்குள்ளாகி வருவதுடன் கிரிக்கட் நிர்வாகத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் வரும் நிலையில் இந்நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் அங்கு 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மும்முரமாக காணப்பட்டிருந்தார்.
இலங்கை கிரிக்கட் நிர்வாகத்தைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு நீண்டகாலமாக அர்ஜுன வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment