இலங்கை நாணய பெறுமதி கடந்த சில நாட்களில் 7.4 வீத வீழ்ச்சியைக் கண்டு இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான பெறுமதி 170 ரூபாவைத் தொட்டுள்ள நிலையில் எதிர்வரும் இரு வாரங்களுக்கு மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறுகிறார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.
இப்பிரச்சினை இலங்கை மாத்திரமன்றி பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா உட்பட பல உலக நாடுகளும் எதிர்நோக்கி வருவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
பெரும்பாலான ஆசிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றில் வைத்து அவர் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment